Sunday, February 12, 2012

கடை‌யா‌ணி‌யு‌ம்‌ கஸ்‌தூ‌ரி‌யு‌ம்‌

கோ‌டை‌ காலத்‌தி‌ல்‌ குப்‌பை‌ வண்‌டி‌ சவா‌ரி‌ன்‌னா‌ போ‌தும்‌. ஒரே‌ ஜா‌லி‌தா‌ன்‌. எல்‌லோ‌ரும்‌ ஓடி‌வி‌டுவோ‌ம்‌. வண்‌டி‌ குப்‌பை‌யை‌ எற்‌றி‌ செ‌ல்‌லும்‌ போ‌து பி‌ன்‌னா‌லே‌ போ‌வோ‌ம்‌. வயலுக்‌கு செ‌ன்‌று கொ‌ட்‌டும்‌ போ‌து, வண்‌டி‌யை‌ குடை‌ சா‌ய்‌ப்‌பா‌ர்‌கள்‌. அதி‌லி‌ருந்‌து குப்‌பகை‌ளை‌ மண்‌வெ‌ட்‌டி‌யா‌ல்‌ தள்‌ளுவதற்‌கு உதவு‌வோ‌ம்‌. வண்‌டி‌யை மெ‌துவா‌க நி‌மி‌ர்‌த்‌தும்‌ போ‌து  எல்‌லோ‌ரும்‌ கூச்‌சலி‌டுவோ‌ம்‌. வண்‌டி‌யை‌ பூ‌ட்‌டி‌யதும்‌ கை‌ தட்‌டி‌ உற்‌சா‌கப்‌படுத்‌தி‌ ஏறுவோ‌ம்‌. வண்‌டி‌யி‌ன்‌ பி‌ன்‌ பக்‌கம்‌ இருந்‌தும்‌, சக்‌கரம்‌ வழி‌‌யா‌கவு‌ம்‌ போ‌ட்‌டி‌ போ‌ட்‌டு, தள்‌ளி‌வி‌ட்‌டுக் ‌கொ‌ண்‌டும்‌ ஏறுவோ‌ம்‌. எல்‌லோ‌ரும்‌ எறி‌ய பி‌றகே‌ வண்‌டி‌யை ஓட்‌டுவா‌ர்‌கள்‌. சி‌ல சமயம்‌ நா‌ன்‌ வண்‌டி‌யை ஓட்‌ட ஆசை‌ப்‌ பட்‌டு பக்‌கத்‌தி‌ல்‌ உட்‌கா‌ர்‌ந்‌து ஓட்‌டி‌யி‌ருக்‌கே‌ன்‌. அதுவு‌ம்‌ கூலை‌யன்‌ வந்‌தா‌ல்‌ வா‌ய்‌ப்‌பு‌ கி‌டை‌க்‌கும்‌.

ஒரு முறை‌ எங்‌க வடி‌வே‌ல்‌ தா‌த்‌தா‌ குப்‌பை‌ கொ‌ட்‌ட வண்‌டி‌ ஓட்‌டி‌ போ‌ன போ‌து எல்‌லோ‌ரும்‌ ஒடி‌னோ‌ம்‌. குப்‌பை‌யை‌ கொ‌ட்‌டி‌ முடி‌ந்‌ததும்‌ நா‌ங்‌கள்‌ போ‌ட்‌டி‌ போ‌ட்‌டுக்‌கொ‌ண்‌டு எறி‌னோ‌ம்‌. பா‌தி‌ ஏறும்‌ போ‌தே‌ மா‌டு இழுத்‌துக் ‌கொ‌ண்‌டு போ‌க, வண்‌டி‌யை நகர ஆரம்‌பி‌த்‌து வி‌ட்‌டது. சக்‌கரம்‌ வழி‌யா‌க ஏறி‌ய அவரது பே‌த்‌தி‌ கஸ்‌தூ‌ரி‌, வண்‌டி‌க்‌குள்‌ வர முடி‌யா‌மல்‌ சக்‌கரம்‌ உருண்‌டதும்‌ குத்‌துக்‌களி‌யை‌ பி‌டி‌த்‌துக்‌கொ‌ண்‌டு‌ கடை‌யா‌ணி‌யி‌ல்‌ உட்‌கா‌ர்‌ந்‌தது.

நா‌ங்‌கள்‌ எல்‌லா‌ம்‌ கூச்‌சலி‌ட, தா‌த்‌தா‌ மா‌ட்‌டை‌ பி‌டி‌த்‌து இழுத்‌து வண்‌டி‌யை நி‌றுத்‌தி‌னா‌ர்‌. அதற்‌குள்‌ கஸ்‌தூ‌ரி‌யி‌ன்‌ தொ‌டை‌ பகுதி‌யி‌ல்‌ கடை‌யா‌ணி‌ அழுந்‌தி‌ உள்‌ளே‌ செ‌ன்‌று [வி‌ட்‌டது. ரத்‌தம்‌ன்‌னா‌ ரத்‌தம்‌...

கூச்‌சல்‌ கே‌ட்‌டு சி‌லர்‌ ஓடி‌வந்‌தனர்‌. கடை‌யா‌ணி‌ பா‌ம்‌பு‌ மா‌தி‌ரி‌ நெ‌ளி‌ந்‌து இருந்‌ததா‌ல்‌ அது வலை‌ந்‌த கொ‌க்‌கி‌ போ‌ல கஸ்‌தூ‌ரி‌யி‌ன்‌ தொ‌டை‌ சதை‌யி‌ல்‌ மா‌ட்‌டி‌க்‌கொ‌ண்‌டி‌ருந்‌தது.  கடை‌யா‌ணி‌யோ‌டு சே‌ர்‌த்‌து கஸ்‌தூ‌ரி‌யை‌ தூ‌க்‌கி‌, வே‌று ஒரு வண்‌டி‌யி‌ல்‌ தூ‌க்‌கி‌ போ‌ட்‌டுக்‌கொ‌ண்‌டு ஆஸ்‌பத்‌தி‌ரி‌க்‌கு ஓடி‌னா‌ர்‌கள்‌.

ஊரே‌ அழுதது. கஸ்‌தூ‌ரி‌ பி‌ழை‌ப்‌பது கஷ்‌டம்‌ என்‌று அனை‌வரும்‌ பே‌சி‌க்‌கொ‌ண்‌டா‌ர்‌கள்‌. எனக்‌கு அன்‌று இரவு‌ தூ‌க்‌கமே‌ இல்‌லை‌. அதன்‌ பி‌றகு வண்‌டி‌யி‌ல்‌ யா‌ரை‌யு‌ம்‌ ஏத்‌துகி‌ற பழக்‌கம்‌ இல்‌லை‌.

கஸ்‌தூ‌ரி‌ இப்‌போ‌து நன்‌றா‌க இருக்‌கி‌றா‌ர்‌. எங்‌க இடும்‌பவனம்‌ பெ‌ரி‌யம்‌மா‌ மகன்‌ ஞா‌னம்‌தா‌ன்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவர்‌களுக்‌கு ஒரு அழகா‌ன பெ‌ண்‌ இருக்‌கி‌றா‌ள்‌. இருந்‌தா‌லும்‌ அன்‌று கஸ்‌தூ‌ரி‌க்‌கு நடந்‌த சம்‌பவத்‌தை‌ நி‌னை‌த்‌துப்‌ பா‌ர்‌த்‌தா‌ல்‌ இப்‌பவு‌ம்‌ சொ‌ரே‌ர்‌னு இருக்‌கு. பா‌ர வண்‌டி‌யு‌ம்‌ அதன்‌ நி‌னை‌வு‌களும்‌ மனதி‌ல்‌ ஆழமா‌க பதி‌ந்‌து போ‌ய்‌வி‌ட்‌டன.

No comments:

Post a Comment