ஊரைப் பற்றி பேசினாலே ஒரு வித மகிழ்ச்சி அதிகரித்துவிடுகிறது. ஊர் என்றால் என் மக்கள்தானே. அவர்களையும் இடத்தையும் தனித்தனியாகப் பார்க்க முடியாதுதானே?. அந்த தெருவும், வயக்காடும் விலா மரமும், எழந்த பழ மரமும், ஈச்ச மரமும் குதித்து விளையாண்ட பூவரசு மரங்களும் ஞாபகத்துக்கு வந்து விடுகிறது. அதுவும் ஐயங்குளத்தில் குளித்த, தாண்டவம் அடித்த குதூகலம் மனதை விட்டு அகலாதவை.
வடசங்கந்தியில் உள்ள வடக்குத் தெருவில்தான் நான் பிறந்தேன். அது ஒரு சின்ன தெருதான். கடைசி வீடு, ஜென்பகவள்ளி அண்ணி வீடு, எங்க வீடு, பேச்சாயி வீடு, தலையாரித் தாத்தா வீடு, பாண்டியாத்தா வீடு, குப்பமாத்தா வீடு, ஜெயராம் அண்ணன் வீடு, கிளார்க் சித்தப்பா வீடு என ஒன்பது வீடுகள்தான்.
சூரியன் காலையில் கிழக்கே கடுவெளியில் உதித்து, மாலையில் காரைக்காரன்வெளியில் மறைவதாக நினைத்த காலம் அது. கடுவெளி என்பது எங்க ஊரைப் போல கிராமமாக இருக்காது. அது ஒரு ஆரம்ப இடம். காரைக்காரன்வெளி ஒரு முடியிற இடம் என்றதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஒரு முறை வெளியூருக்கு சென்ற போதுதான், நம்ம ஊரைப்போல பல கிராமங்கள் இருக்கிறது என்று உணர ஆரம்பித்தேன். அதுவரை என் ஊருதான் என் உலகம். அங்கு வாழும் மக்கள் மட்டுமே மனிதர்கள் என்று நினைத்திருந்தேன்.
எங்கள் ஊரில் தேவர், ராஜா, பிள்ளை, வெள்ளாளர், நாடார், நாட்டரசர், பள்ளர் என எட்டு சாதியினர் மட்டுமே வசித்தார்கள். எல்லோரும் தாயா பிள்ளையா பழகினார்கள். அப்பவெல்லாம் சாதி, தீட்டு என்றுதான் வேற்றுமைகள் இருந்தாலும் ஒற்றுமை அதிகம்.
நான் பொதுவுடமை இயக்கம் பற்றி தெரியாத வரை, அதை கூலிக்காரன் கட்சி என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதனால் வர்க்க பேதம் என்னிடமும் குடிகொண்டிருந்தது. சரி மேட்டருக்கு வருவோம்.
மாலை ஆறு மணிக்கு லைட் கம்பத்தக்கு கீழே விளையாட ஆரம்பித்துவிடுவோம். நான், பழனி, ஜெயந்தி, கலையரசி, தலையயாரி வீட்டு சின்ப்பாப்பா, கடைசி வீட்டு தம்பி, நடு பொண்ணு என ஒரு கூட்டம். ஒளிஞ்சு பிடிச்சி விளையாடுறது, துரத்தி துரத்தி ஓடவது என்று ஒரே குதூகுலம்தான். :மூச்சு இறைக்க துரத்தி பிடிப்பது ஒரே ஜாலிதான். அதே போல நிழலை தொடனும். அதுக்காக வீவ் பாத்து ஓடுவோம் பாருங்க. சூப்பர்.
கடைகார் தாத்தா சத்தம் போடுவார். உட்காந்து விளையாடுங்கடான்னு. சரின்னு மண்ணை குவித்து நீட்டி, அதில் சிறு குச்சியை உள்ளே கொண்டு போய் மறைத்து வைத்துவிடுவோம். எதிரே இருப்பவர் கண்களை இரு கையாலும் பொத்தி மேலே அண்ணாந்து வானத்தை பார்த்தபடி இருப்பார். ரெடி என்று சொன்னதும் அவர் குணிந்து இரு கைகளையும் சேர்த்து, குச்சி இருக்கிற இடத்தை பொத்தனும். அவர் கை வைத்த இடத்தை தவிர மற்ற இரு பக்க மண்ணையும் ஒதுக்கி விட்டு, அவர் கை பொத்திய இடத்தில் அந்த குச்சி இருக்கிறதா என்று பார்ப்போம். இருந்தால் அவரது ஆட்டம். இல்லன்னா, நம்ம ஆட்டம். இப்படி பாய்ண்டுகள் எடுத்து அதிகமாக யார் எடுக்கிறார்களோ, அவர்களை தோற்றவர் தூக்கி சுமக்க வேண்டும். இல்லை என்றால் முதுகில் அடி கொடுப்பதை வாங்கிக்கொள்ள வேண்டும்.
விளையாட்டு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் போதே கடைகார் தாத்தா எங்களை எல்லாம் வட்டமாக உட்கார வைத்து கதை சொல்லுவார். ராஜா ராணி கதை, மந்திரிகதை, நல்ல தங்கா கதை, கள்ள புருஷன் கதை என ஒவ்வொரு நாளும் கதைகள் சொல்வார். விடுகதை போட்டு, அதுக்கு பதில் கேட்பது அவருக்கு பிடித்தமான ஒன்று. நான் கதை சொல்லும் வித்தையை அவரிடம் இருந்துதான் கற்றேன் என்பது இப்போது உணரமுடிகிறது.
கல்யாணசுந்ரம் சித்ப்பாவுக்கு சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு, மீதி குழம்பில் சோற்றை கொட்டி கிளரி, ஆளாலுக்கு ஒரு உருண்டை (யம்மாம் பெரியது) கொடுப்பார் குப்பமாத்தா. அந்த சுவையை இப்போது நினைத்தாலும், நாக்கில் எச்சில் ஊருகிறது. அந்தளவுக்கு ருசியாக இருக்கும். அதுவும் அந்த ஆத்தா கருவாடு வறுத்தாங்கன்னா, ஒரு மரக்கா அரிசி சோற்றை ஒரு ஆளே திங்கலாம். அந்தளவுக்கு கமகமன்னு வாசமும் ருசியும் இருக்கும். இதெல்hம் என்னுடைய இனிக்கும் நினைவுகள். நான் விளையாடியதில் ஒரு சதவீதம் கூட என் மகனுக்கும், மகளுக்கும் கிடைக்கலையே என்று நான் நினைப்பதுண்டு.

No comments:
Post a Comment