என்னுடைய தந்தை கோபாலகிருஷ்ணன் அவர்களைப் பற்றி, அவர் காலத்தில் வாழ்ந்தவர்கள் கூறும் போது பெருமையாக சொல்வார்கள். அவர் தைரியசாலி என்பதில் எல்லோருடைய கருத்தும் ஒற்றுமையாக இருக்கும். அவர் அழுது யாரும் பார்த்ததில்லை. அவர் எதற்காகவும் அழ மாட்டார். கலங்கவும் மாட்டாராம். ஆனால் அறிஞர் அண்ணா இறந்த போது மட்டும் அவர் கலங்கி நின்றார். கண்களில் இருந்து கண்ணீர் வந்தது என்று எனது தாயார் சொல்லி கேட்டிருக்கிறேன்.
அன்று அறுவடைக்கு சென்றவர் சிறிது நேரத்தில திரும்பிவிட்டாடாராம். ஏன் என்று என் தாய் கேட்டதும், பதில் சொல்லாமல் அமைதியாக துக்கத்தை முகத்தில் காட்டி அமர்ந்திருந்தாராம். அம்மாவின் தொடர் கேள்வியால், தந்தை அமைதியை கலைத்து, அண்ணா இறந்துவிட்டார் என்று தெரிவித்து கண் கலங்கினாராம்.
பாறை போன்ற மனம் படைத்தவர் அவர். அவருக்குள்ளும் கண்ணீர் வந்ததே என்று ஆச்சர்யமாக சொல்கிற என் அண்ணையின் அந்த வார்த்தை, என் நெஞ்சில் விழுந்த போது, அதை கெட்டியாக பிடித்துக்கொண்டேன்.
No comments:
Post a Comment