Tuesday, October 20, 2009

முதல்‌வரி‌டம்‌ வா‌ழ்‌த்‌து பெ‌ற்‌ற பா‌லன்‌


செ‌ன்‌னை‌, அக்‌.20- செ‌ன்‌னை‌யி‌ல்‌ நே‌ற்‌று முதல்‌வர்‌ டா‌க்‌டர்‌ கலை‌ஞர்‌ அவர்‌களி‌டம்‌ வா‌ழ்‌த்‌து பெ‌றுகி‌றா‌ர்‌ வடசங்‌கந்‌தி‌ நி‌யூ‌ஸ்‌ ஆசி‌ரி‌யர்‌ பா‌லன்‌. முதல்‌வரி‌டம்‌ தனது தந்‌தை‌ வடசங்‌கந்‌தி‌ அமரர்‌ கோ‌பா‌லகி‌ருஷ்‌ணன்‌ அவர்‌கள்‌ தி‌முக வளர்‌ச்‌சி‌யி‌லும்‌ முன்‌னே‌ற்‌றத்‌தி‌லும்‌ பங்‌கெ‌டுத்‌தது பற்‌றி‌யு‌ம்‌, தனது சி‌த்‌தப்‌பா‌ அரி‌கி‌ருஷ்‌ணன்‌ தி‌முக போ‌ரா‌ட்‌டத்‌தி‌ல்‌ சி‌றை‌ செ‌ன்‌றது பற்‌றி‌யு‌ம்‌ தெ‌ரி‌வி‌க்‌க அதை‌ ஆர்‌வத்‌துடன்‌ கே‌ட்‌கி‌றா‌ர்‌ முதல்‌வர்‌.

Saturday, October 17, 2009

தீ‌பா‌வளி‌யு‌ம்‌ நா‌னும்‌...


இன்‌று தீ‌பா‌வளி‌ என்‌பதா‌ல்‌ என்‌ வீ‌ட்‌டி‌ல்‌ என்‌ குடும்‌பத்‌தி‌னரும்‌, என்‌ தம்‌பி‌ குடும்‌பத்‌தி‌னரும்‌ எனது சகோ‌தரி‌யி‌ன்‌ குடும்‌பத்‌தி‌னரும்‌ என வீ‌‌ட்‌டி‌ல்‌ நி‌றை‌ய பே‌ர்‌ இருந்‌தனர்‌. இரவு‌ முழுவதும்‌ என்‌ மனை‌‌வி‌யு‌ம்‌, என்‌ தம்‌பி‌ மனை‌வி‌யு‌ம்‌ முருக்‌கு, அதி‌ரசம்‌, சுழி‌யன்‌, வடை‌ என இனி‌ப்‌பு‌, கா‌ரம்‌ போ‌ன்‌ற பலகா‌ரங்‌களை‌ செ‌ய்‌துகொ‌ண்‌டி‌ருந்‌தனர்‌.

நா‌ன்‌ தி‌ரை‌யு‌லகி‌ல்‌ மக்‌கள்‌ தொ‌டர்‌பா‌ளரா‌க பணி‌யா‌ற்‌றி‌ வருவதா‌ல்‌ நடி‌கர்‌ சரத்‌குமா‌ர்‌, நடி‌கர்‌ கருணா‌ஸ்‌, வி‌ஜய்‌ ரசி‌கர்‌ மன்‌ற தலை‌வரும்‌ எனது நண்‌பனுமா‌ன ஆர்‌.ரவி‌ரா‌ஜா‌ ஆகி‌யோ‌ர்‌ அன்‌பா‌க கொ‌டுத்‌தி‌ருந்‌த பட்‌டா‌சுகளை‌ இரவு‌ பத்‌து மணி‌வரை‌ வெ‌டி‌த்‌து, அந்‌த உற்‌சா‌க கலை‌ப்பி‌ல்‌ எனது தம்‌பி‌ மற்‌றும்‌ எனது மகன்‌, என்‌து மகள்‌, என்‌ தம்‌பி‌ மகன்‌, மகள்‌ என்‌ அக்‌கா‌ பே‌ரன்‌கள்‌ என அனை‌வரும்‌ தூ‌ங்‌கி‌க்‌கொ‌ண்‌டி‌ருந்‌தனர்‌. அவர்‌களை‌ எழுப்‌பி‌ கா‌லை‌யி‌லும்‌ பட்‌டா‌சு வெ‌டி‌க்‌குமா‌று என்‌ மனை‌வி‌ சொ‌ல்‌லி‌க்‌கொ‌ண்‌டி‌ருந்‌தா‌ல்‌. அப்‌போ‌து என்‌ அருகே‌ வந்‌த என்‌ தம்‌பி‌ மகள்‌ கி‌ருஷ்‌ணவே‌னி‌ என்‌னி‌டம்‌ "பெ‌ரி‌யப்‌பா‌ நீ‌ங்‌க பட்‌டா‌சு வெ‌டி‌க்‌க வா‌ங்‌க என்‌று கே‌ட்‌டா‌ள்‌.

அதற்‌கு என்‌ மனை‌வி‌ குறுக்‌கி‌ட்‌டு அவு‌ங்‌க வெ‌டி‌க்‌க மா‌ட்டா‌ங்‌க.‌‌ நீ‌ போ‌ய்‌ வெ‌டி‌ என்‌று கூறி‌யவா‌று அவளை‌ அனுப்‌பி‌ வை‌த்‌தா‌ல்‌. கி‌ருஷ்‌ணவே‌னி‌ "ஏன்‌ பெ‌ரி‌யப்‌பா‌ பட்‌டா‌சு வெ‌டி‌க்‌க மா‌ட்‌டீ‌ங்‌க என்‌று கே‌ட்‌டவா‌று செ‌ன்‌றா‌ள்‌. அப்‌போ‌து என்‌ நி‌னை‌வு‌களி‌ல்‌ தீ‌பா‌வளி‌ பற்‌றி‌ய நி‌னை‌வு‌க்‌ள் ஞா‌பகத்‌தி‌ற்‌கு வந்‌தது.


அப்‌போ‌து என்‌ தந்‌தை‌ இருந்‌தா‌ர்‌. அவர்‌ என்‌ நி‌னை‌வு‌ தெ‌ரி‌ந்‌த நா‌ளி‌லி‌ருந்‌து ஊர்‌ தலை‌வர்‌ தீ‌னதயா‌ளுரா‌ஜா‌‌ வீ‌ட்‌டி‌ல்‌ மனி‌யம்‌ வே‌லை‌ செ‌ய்‌துகொ‌ண்‌டி‌ருந்‌தா‌ர்‌. ஊர்‌ தலை‌வர்‌ வீ‌ட்‌டுககே‌ தீ‌பா‌வளி‌ முதல்‌ நா‌ள்‌தா‌ன்‌ பட்‌டா‌சு வா‌ங்‌கி‌ வந்‌து கொ‌டுப்‌பா‌ர்‌. அதே‌ போ‌ல அன்‌றுதா‌ன்‌ எங்‌களுக்‌கும்‌ கி‌டை‌க்‌கும்‌. அந்‌த கா‌லகட்‌டத்‌தி‌ல அந்‌த சமயத்‌தி‌ல்‌ மழை‌ பெ‌ய்‌து தீ‌பா‌வளி‌ சந்‌தோ‌ஷத்‌தை‌ கெ‌டுத்‌துவி‌டும்‌. வெ‌டி‌யெ‌ல்‌லா‌ம்‌ ஈரமா‌கி‌ அதை‌ அடுப்‌பு‌ அருகே‌ கா‌யவை‌த்‌து பயன்‌ படுத்‌துவோ‌ம்‌. அவர்‌ வா‌ங்‌கி‌ வந்‌து கொ‌டுத்‌த வெ‌டி‌யை‌ ஒரு மணி‌நே‌ரத்‌தி‌ற்‌குள்‌ வெ‌டி‌த்‌து வி‌டுவே‌ன்‌. அதற்‌கு பி‌றகு பட்‌டா‌சு இல்‌லா‌மல்‌ மற்‌றவர்‌கள்‌ வெ‌டி‌ப்‌பதை‌ பா‌ர்‌க்‌க வெ‌ளி‌யே‌ செ‌ன்‌று வி‌டுவே‌ன்‌. எனக்‌கு எப்‌போ‌தும்‌ பத்‌தாத. தீ‌பா‌வளி‌யா‌கவே‌ இருக்‌கும்‌. அதே‌ போ‌ல ஆட்‌டு கறி‌ வீ‌ட்‌டுக்‌கு வரும்‌. எங்‌கள்‌ அப்‌பா‌ மற்‌றவர்‌களை‌ சா‌ப்‌பி‌ட வை‌த்‌து ஆனந்‌தப்‌ படுவா‌ர்‌. அதனா‌ல்‌‌‌ கறி‌யை‌ வி‌ட அதை‌ சா‌ப்‌பி‌ட அதி‌கம்‌ பே‌ர்‌ வந்‌துவி‌டுவா‌ர்‌கள்‌. அவர்‌கள்‌ சா‌ப்‌பி‌டும்‌ வரை‌ அருகே‌ அமர்‌ந்‌து இன்‌னும்‌ கொ‌ண்‌டா‌ந்‌து வை‌ என்‌று எனது தா‌யி‌டம்‌ கூறுவா‌ர்‌. எனது தா‌ய்‌ என்‌ தந்‌தை‌ பே‌ச்‌சை‌ பெ‌ரி‌தும்‌ மதி‌ப்‌பவர்‌. எங்‌களுக்‌கு ஒரு எலும்‌பு‌ துண்‌டு கூட மி‌ச்‌சம்‌ வை‌க்‌கா‌மல்‌ எல்‌லா‌வற்‌றை‌யு‌ம்‌ கொ‌ண்‌டு வந்‌து போ‌டுவா‌ர்‌.


அவர்‌கள்‌ செ‌ன்‌ற பி‌றகு அவருக்‌கும்‌ எங்‌களுக்‌கும்‌ சா‌ப்‌பா‌டு பறி‌மா‌ற சொ‌ல்‌லுவா‌ர்‌. சட்‌டி‌யி‌ல்‌ இருந்‌தா‌ல்‌தா‌னே‌ அகப்‌பை‌யி‌ல்‌ வரும்‌ என்‌பது போ‌ல எங்‌களுக்‌கு வெ‌றும்‌ குழம்‌பு‌தா‌ன்‌ இருக்‌கும்‌. அதை‌ பா‌ர்‌த்‌துவி‌ட்‌டு சூ‌ழ்‌நி‌லை‌யை‌ பு‌ரி‌ந்‌துகொ‌ண்‌டு எங்‌களை‌யு‌ம்‌ பா‌ர்‌த்‌துவி‌ட்‌டு நா‌ளை‌க்‌கு மரை‌க்‌கா‌ரை‌ கறி‌ கொ‌ண்‌டு வரச்‌சொ‌ல்‌கி‌றே‌ன்‌ என்‌கிற ஆறுதல்‌ வா‌ர்‌த்‌தை‌யை‌ சொ‌ல்‌லி‌வி‌ட்‌டு வெ‌றும்‌ சோ‌ற்‌றை‌ தி‌ண்‌பா‌ர்‌. நா‌ங்‌களும்‌ நா‌ளை‌ வரப்‌போ‌கி‌ற கரி‌யை‌ மனதி‌ல்‌ வை‌த்‌துக்‌கொ‌ண்‌டு சா‌ப்‌பி‌டுவோ‌ம்‌.


இப்‌படி‌த்‌தா‌ன்‌ பத்‌தும்‌ பத்‌தா‌த தீ‌பா‌வளி‌யா‌க என்‌ தீ‌பா‌வளி‌ நகர்‌ந்‌தது. எனது தந்‌தை‌ மறை‌வு‌க்‌கு பி‌றகு அது இன்‌னும்‌ மோ‌சமா‌கி‌யது. நா‌ன்‌ அப்‌போ‌து ஆறா‌ம்‌ வகுப்‌பு‌ படி‌த்‌துக்‌கொ‌ண்‌டி‌ருந்‌தே‌ன்‌. எங்‌கள்‌ அண்‌ணன்‌ வி‌வசா‌ய வே‌லை‌க்‌கு செ‌ல்‌வா‌ர்‌. எனது தயா‌ரும்‌ வி‌வசா‌ய வே‌லை‌க்‌கு செ‌ல்‌வா‌ர்‌. அவர்‌ சம்‌பா‌தி‌க்‌கும்‌ கூலி‌ பத்‌தும்‌ பத்‌தா‌மல்‌தா‌ன்‌ இருந்‌தது. அதனா‌ல்‌ தீ‌பா‌வளி‌ வருவதற்‌கு பதி‌னை‌ந்‌து நா‌ளை‌க்‌கு முன்‌பே‌ தீ‌பா‌வளி‌ பற்‌றி‌ய கனவு‌களும்‌ ஆசை‌களும்‌ அதி‌கமா‌க மனதி‌ல்‌ வந்‌து நி‌ற்‌கும்‌.

பு‌து துணி‌ கி‌டை‌ப்‌பது கடி‌னம்‌. ஆனா‌ல்‌ நம்‌முடை‌ய உழை‌ப்‌பா‌ல்‌ துப்‌பா‌க்‌கி‌ வா‌ங்‌கி‌ அதி‌ல்‌ கே‌ப்‌ வை‌த்‌து வெ‌டி‌க்‌க வே‌ண்‌டும்‌ என்‌று ஆசை‌ பி‌றக்‌கும்‌. அதனா‌ல்‌ தூ‌க்‌கம்‌ வரா‌து தவி‌ப்‌பே‌ன்‌. ஒரு வழி‌‌யா‌க ஒரு முடி‌வு‌ எடுத்‌தே‌ன்‌. வி‌டுமுறை‌ நா‌ளா‌ன ஞா‌யி‌ற்‌றுகி‌ழமை‌ அறுவடை‌ வயலி‌ல்‌ நெ‌ல்‌ பொ‌ருக்‌கி‌ அதி‌ல்‌ கா‌சு சே‌ர்‌ப்‌பது என்‌பது அந்‌த முடி‌வு‌. அது ஒரு பு‌ரட்‌சி‌ என்‌று கூட சொ‌ல்‌லா‌ம்‌. அப்‌போ‌தெ‌ல்‌லா‌ம்‌ சா‌தி‌ கெ‌ளரவம்‌ பா‌ர்‌த்‌து எவ்‌வளவு‌ கஷ்‌டமா‌க இருந்‌தா‌லும்‌ நெ‌ல்‌ பொ‌றுக்‌குவதை‌ கே‌வலமா‌க நி‌னை‌ப்‌பா‌ர்‌கள்‌. நா‌ன்‌தா‌ன்‌ தே‌வர்‌ சா‌தி‌யி‌ல்‌ பி‌றந்‌து வயலி‌ல்‌ இறங்‌கி‌ நெ‌ல்‌ பொ‌றுக்‌கி‌யவன்‌ என்‌று நி‌னை‌க்‌கி‌றே‌ன்‌.

அது குறுவை‌ அறுவடை‌ கா‌லமா‌க இருக்‌கும்‌. வயலி‌ல்‌ தண்‌ணீ‌ரும்‌ சே‌ரும்‌ இருக்‌கும்‌. கதி‌ர்‌ அறுத்‌த அன்‌றே‌ அதை‌ கரை‌யி‌ல்‌ சே‌ர்‌ப்‌பா‌ர்‌கள்‌. அவர்‌கள்‌ அறுத்‌துப்‌போ‌ட்‌ட அரி‌யை‌ அள்‌ளி‌ கட்‌டா‌க கட்‌டும்‌ போ‌து அரி‌ அள்‌ளி‌ய இடத்‌தி‌ல சி‌தறி‌ கி‌டக்‌கும்‌ ஓரி‌ரண்‌டு கதி‌ர்‌களை‌ மா‌லை‌ வரை‌ பொ‌றுக்‌கி‌ அதை‌ மொ‌த்‌தமா‌க சே‌ர்‌த்‌து கா‌யவை‌த்‌து கடை‌யி‌ல்‌ கொ‌ண்‌டு போ‌ட்‌டா‌ல்‌ அது கா‌ல்‌ மரக்‌கா‌ல்‌ தே‌றும்‌. அதி‌ல்‌ துப்‌பா‌க்‌கி‌ வா‌ங்‌க முடி‌யா‌வி‌ட்‌டா‌லும்‌ ஒரு நட்‌டு வா‌ங்‌க முடி‌யு‌ம்‌. ஒரு டஜன்‌ கே‌ப்‌ வா‌ங்க அண்‌ணன்‌ சண்‌முகசுந்‌தரம்‌ அவரை‌ நா‌டுவே‌ன்‌.


வயலி‌ல்‌ நெ‌ல்‌ பொ‌ருக்‌கி‌னே‌ன்‌ என கே‌ள்‌வி‌ப்‌பட்‌டா‌ல்‌ அவர்‌ தி‌ட்‌டுவா‌ர்‌ என்‌று பயம்‌. இருந்‌தா‌லும்‌ அவருக்‌கு தெ‌ரி‌யா‌மல்‌ பயந்‌து பயந்‌து அந்‌த வே‌லை‌யை‌ செ‌ய்‌வே‌ன்‌. சி‌ல வயலி‌ல்‌ அப்‌படி‌ பொ‌ருக்க வி‌ட மா‌ட்‌டர்‌கள்‌. என்‌ மீ‌து இறக்‌கப்‌பட்‌டு வே‌ண்‌டுமெ‌ன்‌றே‌ கூலி‌க்‌கா‌ரர்‌கள்‌ நெ‌ல்‌ பயி‌ரை‌ சி‌ந்‌துவா‌ர்‌கள்‌ என்‌கி‌ற நி‌னை‌ப்‌பு‌. எப்‌போ‌தும்‌ உழை‌ப்‌பவர்‌கள்‌ மே‌ல்‌ சந்‌தே‌கப்‌படும்‌ கூட்‌டம்‌தா‌னே‌. இருந்‌தா‌லும்‌ வி‌டமா‌ட்‌டே‌ன் பொ‌ருக்‌குவே‌ன்‌.

இப்‌படி‌ என்‌ தீ‌பா‌வளி‌ பத்‌தும்‌ பத்‌தா‌மல்‌ போ‌யி‌ருக்‌கி‌றது. ஒவ்‌வொ‌ரு தீ‌பா‌வளி‌க்‌கும்‌ நா‌ன்‌ போ‌ரா‌டி‌யி‌ருக்‌கி‌றே‌ன்‌. பு‌தி‌ய முடி‌வு‌களை‌ எடுத்‌து மறு தீ‌பா‌வளி‌யை‌ கொ‌ண்‌டா‌டி‌யி‌ருக்‌கி‌றே‌ன்‌. ஒரு முறை‌ தீ‌பா‌வளி‌ அன்‌று மற்‌றவர்‌கள்‌ வீ‌ட்‌டு கூறை‌யி‌ல்‌ பு‌கை‌ போ‌வதை‌ பா‌ர்‌த்‌துவி‌ட்‌டு "எல்‌லோ‌ர்‌ வீ‌டும்‌ அவி‌யு‌தே‌ எங்‌க வீ‌டு அவி‌யலை‌யே‌" என்‌று சொ‌ன்‌னே‌னா‌ம்‌. அடி‌க்‌கடி‌ என்‌ சகோ‌தரி‌ அதை‌ ஞா‌பகப்‌படுத்‌துவா‌ர்‌. தீ‌பா‌வளி‌ என்‌ வீ‌ட்‌டி‌ல்‌ அப்‌படி‌த்‌தா‌ன்‌ எங்‌களை‌ வதை‌த்‌து செ‌ன்‌றி‌ருக்‌கி‌றது.


ஒரு முறை‌ நா‌ன்‌ ஆசை‌யா‌ய்‌ வளர்‌த்‌த ஆடு தீ‌பா‌வளி‌ அன்‌று எல்‌லோ‌ரது வீ‌ட்‌டுக்‌கும்‌ கறி‌யா‌க மா‌றி‌ப்‌போ‌னது. எங்‌கள்‌ வீ‌‌ட்‌டுக்‌கும்‌ வந்‌தி‌ருந்‌தது. ஆனா‌ல்‌ நா‌ன்‌ சா‌ப்‌பி‌ட வி‌ல்‌லை‌. நா‌ன்‌ வளர்‌த்‌த ஆடு உணவா‌க, உடை‌யா‌க, தீ‌பா‌வளி‌ பலகா‌ரமா‌க மா‌றி‌ப்‌போ‌னதை‌ என்‌னா‌ல்‌ சகி‌த்‌துக்‌கொ‌ல்‌ல முடி‌யவி‌ல்‌லை‌. அதனா‌ல்‌ அந்‌த தீ‌பா‌வளி‌ மட்‌டுமல்‌ல மற்‌ற இரண்‌டு நா‌ட்‌களும்‌ எனக்‌கு சோ‌கமா‌கவே‌ போ‌னது. அதி‌லி‌ருந்‌து நா‌ன்‌ தீ‌பா‌வளி‌யை‌ வலி‌யா‌க நி‌னை‌க்‌க ஆரம்‌பி‌த்‌து வி‌ட்‌டே‌ன்‌.

நா‌ன்‌ என்‌னை‌ உணர்‌ந்‌து படி‌க்‌க ஆரம்‌பி‌த்‌த போ‌து தீ‌பா‌வளி‌ எதற்‌கு கொ‌ண்‌டா‌டுகி‌றோ‌ம்‌ என்‌ற கே‌ள்‌வி‌யை‌ கே‌ட்‌க ஆரம்‌பி‌த்‌தே‌ன்‌. நரகா‌சூ‌ரன்‌ என்‌ற கெ‌ட்‌டவன்‌ அழி‌‌ந்‌ததா‌ல்‌ தே‌வர்‌களும்‌, முனி‌வர்‌களும்‌, மக்‌களும்‌ மகி‌ழ்‌ச்‌சி‌ அடை‌ந்‌தனர்‌. அதன்‌ நி‌னை‌வா‌கத்‌தா‌ன்‌ கொ‌ண்‌டா‌டுகி‌றோ‌ம்‌ என்‌று கூறி‌னா‌ர்‌க‌ள்‌. எனக்‌கு எந்‌த கதை‌யை‌ கே‌ட்‌டா‌லும்‌ அதன்‌ முழுமை‌ தெ‌ரி‌யனும்‌. அதனா‌ல்‌ அவனை‌ கொ‌ன்‌ற நல்‌லவன்‌ யா‌ர்‌ என்‌று கே‌ட்‌டே‌ன்‌. அதற்‌கு கி‌ருஷ்‌‌ணமூ‌ர்‌த்‌தி‌ பெ‌ரி‌யப்‌பா‌வி‌டம்‌ கே‌ட்‌க சொ‌ன்‌னா‌ர்‌கள்‌.


கி‌ருஷ்‌ணமூ‌ர்‌த்‌தி‌ பெ‌ரி‌யப்‌பா‌வி‌டம்‌ செ‌ன்‌று அந்‌த கதை‌யை‌ பற்‌றி‌ முழுமை‌யா‌க கே‌ட்‌டே‌ன்‌. அவர்‌ என்‌ன சொ‌ன்‌னா‌ர்‌ என்‌றா‌ல்‌....

திரேதாயுகத்தில் ஒரு சமயம் பூமி கடலுக்குள் அமிழ்ந்துவிட்டது. அப்பொழுது திருமால், பூமியைக் காப்பாற்றுவதற்காக வராகமாக அவதரித்தார்; பூமியைத் தன் கொம்பினால் தாங்கி நின்றார். அப்பொழுது திருமாலுக்கும், பூமி பிராட்டிக்கும் உண்டான காதலால் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை திருமாலுக்கும் பூமி பிராட்டிக்கும் பிறந்த குழந்தையாக இருந்தாலும், திருமால் வராக (பன்றி) உருவத்தில் ஆவேச உணர்வுடன் இருந்தபோது பிறந்ததால் அக்குழந்தை அசுரத் தன்மையுடன் பிறந்துவிட்டது.

இப்படியான தனது குழந்தையைக் கண்டு பூமிதேவி வருந்தி அழுதாள். அக்குழந்தை திருமாலையும், பூமி பிராட்டியையும் துதித்து, ""நான் என் தாயின் கையாலேயே சாக வேண்டும் என்ற வரம் கொடுங்கள்'' என்று கேட்டான். பூமி பிராட்டி முதலில் வருந்தினாலும் ஒருவாறு மனம் தேறினாள். திருமாலும், அவன் கேட்ட வரத்தை அளித்தார். அக்குழந்தைதான் பிற்காலத்தில், "நரகாசுரன்' என்ற பெயருடன் வாழ்ந்தான்.

துவாபர யுகத்தில் திருமால் கிருஷ்ணனாக அவதாரம் செய்தார்; துவாரகையிலிருந்தபடி ஆட்சி செய்து வந்தார். பூமி பிராட்டி, சத்திய பாமாவாக அவதரித்தாள். இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர்.

முன்பு திருமாலுக்கும், பூமி பிராட்டிக்கும் பிறந்த குழந்தையான நரகாசுரன், ஜோதிஷபுரம் என்ற இடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான். அவன் பல தவங்கள் செய்து பெற்ற வரங்களினால் தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் என்ற பலரையும் கொடுமைப் படுத்தினான். அவர்கள் கிருஷ்ணரிடம் வந்து நரகாசுரனின் கொடுமையிலிருந்து காப்பாற்றுமாறு முறையிட்டனர்.


அவர்களைக் காப்பாற்ற கிருஷ்ணர் நரகாசுரனுடன் போருக்குப் புறப்பட்டார். அவர் மனைவியான வீராங்கனை சத்தியபாமா, கண்ணபிரானுக்குத் தேரோட்டியாகச் சென்றாள். கண்ணனுக்கும், நரகாசுரனுக்கும் கடும் போர் நடந்தது. நரகாசுரனுக்கு முன்பு கொடுத்திருந்த வரத்தினால், "அவன் தன் கையால் சாகமாட்டான்; பூமி பிராட்டியின் அம்சமான சத்தியபாமாவினால்தான் சாவான்' என்பது கண்ணபிரானுக்குத் தெரியும். ஆதலால் அவர் நரகாசுரனுடன் போர் புரிவதுபோல் பாவனை செய்து, அவன் அம்புபட்டு வீழ்வதுபோல் தேர்த்தட்டில் வீழ்ந்துவிட்டார். அப்பொழுது சத்தியபாமா பதற்றமடைந்து, கண்ணபிரான் கையில் இருந்த வில்லை எடுத்து நரகாசுரன்மேல் அம்பு தொடுத்தாள். அந்த அம்பு பட்டு நரகாசுரன் சாய்ந்துவிட்டான்.

நரகாசுரனுக்கு, தான் பெற்றிருந்த வரம் நினைவுக்கு வந்தது. தன் தாய் பூமிபிராட்டியே சத்தியபாமாவாக வந்து தன்மேல் அம்பெய்திருக்கிறாள் என்பதை உணர்ந்தான். ""அம்மா! என்னைப் பெற்ற தாயே...'' என்று கைகூப்பி வணங்கினான். அசுரன் தன்னை "பெற்ற தாயே!' என்று அழைத்தது ஏன்? } என்று புரியாமல் சத்தியபாமா திகைத்தாள்.


நரகாசுரன், தான் பிறந்ததையும் மரணத்தைப் பற்றிய தனது வரத்தையும் சத்தியபாமாவுக்கு நினைவூட்டினான். பின்னர் அவன், ""தாயே... தந்தையே... இனி நான் பிழைக்கமாட்டேன். என்னைப் போன்ற தீயசக்திகள் அழிந்தால்தான் உலகம் தீமைகள் இன்றி வாழ முடியும். ஆதலால் நான் இறந்த நாளைப் புனிதமான நாளாகக் கருத வேண்டும்! அனைவரும் எண்ணெய் தேய்த்துக் குளித்து புத்தாடை அணிந்து தீப ஒளியேற்றி இறைவனை வணங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும்'' என்று வரம் கேட்டான். அவர்களும் அவ்வாறே வரம் அளித்தனர். நரகாசுரன் இறந்தான். அவன் இறந்த நாளையே தீபாவளியாகக் கொண்டாடுகிறோம் என்று பாகவத புராணம் விளக்குகிறது.
என்‌றா‌ர்‌.

எனக்‌கு பெ‌ரி‌யப்‌பா‌ சொ‌ன்‌ன கதை‌ ரொ‌ம்‌பவு‌ம்‌ பி‌டி‌த்‌தி‌ருந்‌தது. தா‌ய்‌ செ‌ண்‌டி‌மெ‌ண்‌ட்‌ உள்‌ள கதை‌ என்‌பதா‌ல்‌ ரொ‌ம்‌பவே‌ பி‌டி‌த்‌தி‌ருந்‌தது. ஒவ்‌வொ‌ரு தீ‌பா‌வளி‌ அன்‌றும்‌ நரா‌கா‌ சூ‌ரன்‌ நி‌னை‌வு‌க்‌கு வருவா‌ர்‌. அதே‌ போ‌ல மக்‌களை‌ சுரண்‌டுபவர்‌களை‌ பா‌ர்‌க்‌கும்‌ போ‌து அவர்‌கள்‌ நரகா‌சூ‌ரனா‌க தெ‌ரி‌வா‌ர்‌கள்‌.

இருந்‌தா‌லும்‌ போ‌னஸ்‌ தி‌ருவி‌ழா‌வா‌க எனக்‌கு அந்‌த நா‌ள்‌ மனதி‌ல்‌ நி‌ன்‌றது. பி‌றகு பெ‌ரி‌யா‌ர்‌ பற்‌றி‌ படி‌த்‌த போ‌து அவர்‌ தீ‌பா‌வளி‌ பற்‌றி‌ கே‌ட்‌ட பத்‌து கே‌ள்‌வி‌கள்‌ என்‌னுள்‌ளும்‌ கே‌ள்‌வி‌ கே‌ட்‌டக ஆரம்‌பி‌த்‌தது.

பெ‌ரி‌யா‌ர்‌ கே‌ட்‌ட 10 ....

புராணம் கூறுவது: 1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டுபோய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.


2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.

3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாக பூமி கர்ப்பமுற்று நரகாவரன் என்ற பிள்ளையையும் பெற்றது.

6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாவரடனுடன் போர் துவங்கினார்.

8. விஷ்ணுவால் அவனைக் கொல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாவரனுடன் போர்தொடுத்து அவனைக் கொன்றான்.

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10. இந்த மகிழ்ச்சி (நரகாவரன் இறந்ததற்காக) நரகாவரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாடவேண்டும். இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!

இந்த 10 விஷயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது.

பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது ? சுருட்டினால் னக்கி கட்கத்திலோ, தலைமீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து னக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின் கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்?


விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்கவேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்? பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் - தமிழ்ப் புலவர்கள் அறிஞர்கள் சிந்திக்கவேண்டாமா? நரகாவரன் ஊர் மாகிஷ்மகி என்று நகர இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகித்ஜோஷா! என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மகாணத்து அருகில் இருக்கிறது.

இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்? இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதிவைத்தான் என்பதற்காகவும் சொல்கிறான் என்பதற்காகவும் நடுஜாமத்தில் எழுந்துகொண்டு

குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும் பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும் நாம் ஆமாம் என்று சொல்லி கும்பிட்டுக் காசு கொடுப்பதும் அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால் இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!! பார்ப்பனர்களே உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால், இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டுமிராண்டிகளாக இருந்திருக்கவேண்டும்.

அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்கவேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.


பெ‌ரி‌யா‌ரி‌ன்‌ கண்‌ணா‌டி‌யை‌ போ‌ட்‌டு சி‌ல வி‌ஷயங்‌களை‌ பா‌ர்‌க்‌கி‌ற போ‌து கே‌ள்‌வி‌ கே‌ட்‌கி‌ற என்‌னுடை‌ய எண்‌ணம்‌ இன்‌னும்‌ மே‌ன்‌மை‌ அடை‌ந்‌தது. அப்‌போ‌தி‌லி‌ருந்‌து தீ‌பா‌வளி‌ பண்‌டி‌கை‌யை‌ நா‌ன்‌ கொ‌ண்‌டா‌டுவதி‌ல்‌லை‌. அதற்‌கா‌க கொ‌ண்‌டா‌டுவபவர்‌களை‌ நா‌ன்‌ தடுப்‌பதும்‌ இல்‌லை‌. நா‌ன்‌ வரை‌ மதபண்‌டி‌களை‌ கொ‌ண்‌டா‌டுவது கூடா‌து என்‌று முடி‌வெ‌டுத்‌தே‌ன்‌.

அதற்‌கு பி‌றகு இந்‌த வெ‌டி‌ சப்‌பதத்‌தா‌ல்‌ பறவை‌களும்‌, வி‌லங்‌குகளும்‌ எப்‌படி‌ பயந்‌து போ‌ய்‌ இருக்‌கி‌ன்‌றன. மா‌சு படி‌யு‌ம்‌ இந்‌த கா‌ற்‌று நம்‌மை‌ எப்‌படி‌ வதை‌க்‌கும்‌.. ஓசோ‌ன்‌ படலம்‌ பா‌தி‌ப்‌பு‌ என பல எண்‌ணங்‌கள்‌ தீ‌பா‌வளி‌ அன்‌று கே‌ள்‌வி‌யை‌ கே‌ட்‌டுக்‌கொ‌ண்‌டே‌ இருக்‌கும்‌.

செ‌ல்‌போ‌னி‌ல்‌ நண்‌பர்‌கள்‌ அனுப்‌பு‌ம்‌ வா‌ழ்‌த்‌துக்‌களுக்‌கு கூட பதி‌ல்‌ அனுப்‌ப முடி‌வதி‌ல்‌லை‌.‌ செ‌ல்‌போ‌ன்‌ கம்‌பெ‌னி‌க்‌கு லா‌பம்‌ பா‌ர்‌க்‌க இதை‌ ஒரு வி‌யா‌பரமா‌க செ‌ய்‌கி‌ரா‌ர்‌கள்‌ என்‌பது மட்‌டும்‌ எனக்‌கு பு‌ரி‌கி‌றது.


இதோ‌ இந்‌த கட்‌டுரை‌யை‌ முடி‌க்‌கும்‌ போ‌து என்‌னை‌ அழை‌க்‌கி‌றா‌ர்‌ என்‌ சகோ‌தரி. வீ‌ட்‌டு தெ‌ய்‌வத்‌துக்‌கு முன்‌பு‌ பு‌து உடை‌களை‌யு‌ம்‌ பலகா‌ரங்‌கையு‌ம்‌ வை‌த்‌து பூ‌ஜை‌ செ‌ய்‌துவி‌ட்‌டு எல்‌லோ‌ரது தலை‌யி‌ல்‌ எண்‌ணை‌ வை‌த்‌து தே‌ய்‌க்‌க ஆரம்‌பி‌க்‌கி‌றா‌ர்‌.

இனி‌மே‌ல்‌ குளி‌யலும்‌, பி‌றகு பலகா‌ரங்‌கள்‌ சா‌ப்‌பி‌டுவதும்‌ டி‌வி‌யி‌ல்‌ நி‌கழ்‌ச்‌சி‌கள்‌ பா‌ர்‌ப்‌பதுமா‌க தீ‌பா‌வளி‌  கொ‌ண்‌டா‌ட்‌டமா‌க இருக்‌கும்‌. நா‌ன்‌ அவர்‌களை‌ ரசி‌த்‌தவா‌ரு‌ அவர்‌களே‌ இதுவரை‌ ஏன்‌ என்‌று கே‌ட்‌கா‌மல்‌ கொ‌ண்‌டா‌டும்‌ தீ‌பா‌வளி‌ நி‌னை‌த்‌து சி‌ரி‌க்‌கி‌றே‌ன்‌. இங்‌கே‌ மகி‌ழ்‌ச்‌சி‌ மட்‌டுமே‌ நி‌ற்‌கி‌றது. அதற்‌கு பணம்‌ முக்‌கி‌ய கா‌ரணமா‌க இருக்‌கி‌றது.

Wednesday, September 9, 2009

குலதெ‌ய்‌வம்‌ தகட்‌டூ‌ர்‌ பை‌ரவர்‌


என்‌ தா‌ய்‌ மீ‌து நா‌ன்‌ நி‌றை‌ய அன்‌பு‌ வை‌த்‌தி‌ருந்‌தா‌லும்‌ அவர்‌ சொ‌ல்‌வதை‌ நா‌ன்‌ கே‌ட்‌பதி‌ல்‌லை‌ , மதி‌ப்‌பதி‌ல்‌லை‌ என்‌ற ஒரு வருத்‌தம்‌ என்‌ தா‌ய்‌க்‌கு உண்‌டு. அது எனக்‌கு நன்‌றா‌கவே‌ தெ‌ரி‌யு‌ம்‌. அது ஒரு
கருத்‌து முரண்‌பா‌டு.
தா‌ய்‌ பக்‌தி‌ மி‌குந்‌தவர்‌‌. அவரி‌டம்‌ அருள்‌ பெ‌றவு‌ம்‌ ஆசிர்‌வா‌தம்‌ பெ‌றவு‌ம்‌ எங்‌களி‌ல்‌ பலர்‌ இருக்‌கி‌றா‌ர்‌கள்‌. அவர்‌ மீ‌து குலதெ‌ய்‌வம்‌ கடவு‌ள்‌ இறங்‌கி‌ ஆசி‌ர்‌வதி‌ப்‌பதா‌க நி‌னை‌த்‌து அவரி‌டம்‌ வருவா‌ர்‌கள்‌. அவர்‌ மீ‌து சா‌மி‌ வரவழை‌த்‌து என்‌ன செ‌ய்‌ய வே‌ண்‌டும்‌ என்‌று ஆலோ‌சனை‌யு‌ம்‌ கே‌ட்‌பா‌ர்‌கள்‌. அவர்‌‌ கூறும்‌ தை‌ரி‌யமும்‌ ஆலோ‌சனை‌யை‌யு‌ம்‌ கே‌ட்‌டு அதன்‌ படி‌ நடந்‌துகொ‌ண்‌டி‌ருக்‌கி‌றா‌ர்‌கள்‌.
எனக்‌கு இந்‌த பக்‌தி‌யி‌ல்‌ உடன்‌‌பா‌டி‌ல்‌லை‌. அதே‌ போ‌ல எனக்‌குள்‌ உள்‌ள கருத்‌தை‌ நா‌ன்‌ யா‌ரி‌டமும்‌ தி‌ணி‌த்‌தி‌ல்‌லை‌. அதே‌ போ‌ல அதி‌கமா‌க மனம்‌ பு‌ண்‌படும்‌ படி‌ வி‌மர்‌சி‌த்‌ததும்‌ இல்‌லை‌. 

நா‌ன்‌ தி‌ரை‌ப்‌படத்‌துறை‌யி‌ல்‌ என்‌னை‌ ஈடுபடுத்‌தி‌க்‌கொ‌ண்‌டி‌ருந்‌த போ‌து போ‌தி‌ய வருமா‌னம்‌ இல்‌லா‌ததா‌ல்‌ இதி‌ல்‌ வெ‌ற்‌றி‌யடை‌ந்‌த பி‌றகு வீ‌ட்‌டுக்‌கு தொ‌டர்‌பு‌கொ‌ள்‌ள வே‌ண்‌டும்‌ என உறுதி‌யா‌க இருந்‌தே‌ன்‌. இதனா‌ல்‌ கடி‌த தொ‌டர்‌பு‌ எதுவு‌ம்‌ வை‌த்‌துக்‌கொ‌ள்‌ளவி‌ல்‌லை‌. அந்‌த கா‌லகட்‌டத்‌தி‌ல்‌ என்‌னை‌ தே‌டி‌ எங்‌கள்‌ குலதெ‌ய்‌வத்‌தை‌ நா‌டி‌ என்‌ அன்‌னை‌ பல முறை‌ வே‌ண்‌டி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. என்‌ மகனை‌ என்‌னி‌டம்‌ கொ‌ண்‌டு வந்‌து சே‌ர்‌த்‌துவி‌டு. அவன்‌ மனதை‌ ஊரு பக்‌கமா‌க தி‌ருப்‌பி‌வி‌டு என அவரது பல கோ‌ரி‌க்‌கை‌களை‌யு‌ம்‌ வே‌ண்‌டுதல்‌களை‌யு‌ம்‌ முறை‌யி‌ட்‌டி‌ருக்‌கி‌றா‌ர்‌.

நா‌ன்‌ தி‌ரை‌ப்‌படத்‌துறை‌யி‌ல்‌ மக்‌கள்‌ தொ‌டர்‌பா‌ளர்‌ ஆனதும்‌ ஊருக்‌கு செ‌ன்‌றே‌ன்‌. அதன்‌ பி‌றகு தி‌ருமணம்‌ நடந்‌தது. இதோ‌ கா‌ல ஓட்‌டத்‌தில்‌ வா‌ழ்‌க்‌கை‌யை‌ மகி‌ழ்‌ச்‌சி‌யா‌க நடத்‌தி‌க்‌கொ‌ண்‌டி‌ருக்‌கி‌றே‌ன்‌. இருந்‌தா‌லும்‌ சி‌ல முயற்‌சி‌கள்‌ தோ‌ல்‌வி‌யடை‌வதும்‌, அதனா‌ல்‌ ஏற்‌பட்‌ட நஷ்‌டமும்‌ எங்‌களை‌ கஷ்‌டப்‌படுத்‌திய போ‌து அதனா‌ல்‌ எனக்‌கும்‌ என்‌ மனை‌வி‌க்‌கும்‌ சி‌ன்‌ன வருத்‌தங்‌கள்‌ வரும்‌. அதை‌ நா‌னே‌ இறங்‌கி‌ செ‌ன்‌று சமா‌தா‌னப்‌ படுத்‌தி‌க்‌ கொ‌ள்‌வே‌ன்‌
.
ஆனா‌ல்‌ அப்‌போ‌து மனம்‌ உடை‌ந்‌தி‌ருக்‌கும்‌ போ‌து அது நா‌ன்‌ கடவு‌ளை‌ மதி‌க்‌கா‌த கா‌ரணம்‌ என்‌று என்‌ அன்‌னை‌ நி‌னை‌ப்‌பா‌ர்‌. அவர்‌ பல முறை‌ சொ‌ல்‌லி‌யு‌ம்‌ குலதெ‌ய்‌வம்‌ கோ‌வி‌லுக்‌கு செ‌ல்‌ல வி‌ல்‌லை‌ என்‌று ஒரு வருத்‌தம்‌ அவரி‌டம்‌ இருக்‌கி‌றது. அதே‌ போ‌ல அவரது வே‌ண்‌டுதல்‌களை‌ நா‌ன்‌ நி‌றை‌வே‌ற்‌றவி‌ல்‌லை‌ என்‌ற வருத்‌தமும்‌ அவருக்‌கு இருக்‌கி‌றது. அதனா‌ல்‌தா‌ன்‌ நா‌ன்‌ இப்‌படி‌ கஷ்‌டப்‌படுவதா‌க அவர்‌ நி‌னை‌த்‌து வருந்‌துவா‌ர்‌.

அன்‌று மனம்‌  ஒரு வே‌தனை‌யி‌ல்‌ இருந்தது அப்‌போ‌து எனது தா‌ய்‌ என்‌னி‌டம்‌ வந்‌து ஏன்‌ இப்‌படி‌ இருக்‌கி‌றா‌ய்‌. மனதி‌ல்‌ போ‌ட்‌டு கண்‌டதை‌யு‌ம்‌ குழப்‌பிக்‌கொ‌ள்‌ளா‌தே‌ என்‌றா‌ர்‌. அப்‌போ‌து என்‌ தா‌யை கூர்‌ந்‌து கவனி‌த்‌தே‌ன்‌. அதி‌ல்‌ அவர்‌ என்‌ மீ‌து வை‌த்‌தி‌ருக்‌கும்‌ அளவு‌ கடந்‌த பா‌சமும்‌ கருணை‌யு‌ம்‌ தெ‌ரி‌ந்‌தது. எனக்‌கா‌க என்‌தா‌ய்‌ கவலை‌கொ‌ண்‌டி‌ருக்‌கி‌றா‌ர்‌ என்‌பது தெ‌‌ரி‌ந்‌தது.

அம்‌மா‌ அருகி‌ல்‌ வந்‌து பா‌ர்‌த்‌து என்‌னி‌டம்‌ நா‌ன்‌ நி‌ம்‌மதி‌யி‌ல்‌லா‌மல்‌ இருக்‌கி‌றே‌ன்‌. நீ‌ எனக்‌கா‌க அங்‌கு செ‌ன்‌று வரணும்‌ என்‌ வே‌ண்‌டுவது போ‌ல கே‌ட்‌டா‌ர்‌. என்‌ பே‌ச்‌சை‌ மதி‌க்‌கா‌தவன்‌, ஆலோ‌சனை‌ சொ‌ல்‌லக்‌ கூட தகுதி‌யி‌ல்‌லா‌தவளா‌யி‌ட்‌டோ‌மோ‌ என்‌று அவர்‌ வருந்‌துகி‌ன்‌ற அளவு‌க்‌கு இருக்‌கி‌றோ‌மே‌ என்‌று என்‌ மனதுக்‌கு பட்‌டது.

எனக்‌கெ‌ன்‌று கொ‌ள்‌கை‌கள்‌ இருக்‌கி‌றது. அதி‌லி‌ருந்‌து நா‌ன்‌ மா‌றுவதி‌ல்‌லை‌. ஆனா‌ல்‌ ஒரு அன்‌னை‌யி‌டம்‌ எவ்‌வளவு‌ நா‌ளை‌க்‌கு உலகம்‌ தோ‌ன்‌றி‌ய வரலா‌ற்‌றை‌ சொ‌ல்‌லி‌க்‌கொ‌ண்‌டி‌ருப்‌பது. அவர்‌ மனம்‌ ஆறுதல்‌ அடை‌ய அவர்‌ பே‌ச்‌சை‌ கா‌து கொ‌டுத்து கே‌ட்‌டு அவர்‌ உள்‌ளம்‌ மகி‌ழ்‌ச்‌சி‌யடை‌ய வே‌ண்‌டும்‌. அவருக்‌கா‌க செ‌ன்‌று வரலா‌மே‌ என்‌று மனதி‌ற்‌குள்‌ ஒரு எண்‌ணம்‌. அது பக்‌தி‌யா‌ல்‌ அல்‌ல. ஆனா‌ல்‌ தா‌யி‌ன்‌ பா‌சத்‌தா‌ல்‌ வந்‌த உணர்‌வு‌. அதனா‌ல்‌ என்‌ குலதெ‌ய்‌வம்‌ கோ‌வி‌லுக்‌கு செ‌ன்‌று வர சம்‌மதி‌த்‌தே‌ன்‌.

அதற்‌கா‌க நா‌ட்‌களை‌ தள்‌ளி‌ப்‌போ‌ட வி‌ரும்‌பவி‌ல்‌லை‌. மனை‌வி‌யை‌ அழை‌த்‌துக்‌கொ‌ண்‌டு அந்‌த வா‌ரமே‌ தி‌டீ‌ர்‌ என்‌று பு‌றப்‌பட்‌டே‌ன்‌. செ‌ன்‌னை‌யி‌லி‌ருந்‌து எனது சொ‌ந்‌த ஊரா‌ன வடசங்‌கந்‌தி‌ செ‌ன்‌றே‌ன்‌. பி‌றகு அங்‌கி‌ருந்‌து தி‌ருத்‌துறை‌ப்‌பூ‌ண்‌டி‌ செ‌ன்‌று அங்‌கி‌ருந்‌து வே‌தா‌ரண்‌யம்‌ செ‌ல்‌லும்‌ பே‌ருந்‌தி‌ல்‌ ஏறி‌னோ‌ம்‌. வா‌ய்‌மே‌டு என்‌ற கி‌ரா‌மத்‌தி‌ல்‌ இறங்‌கி‌ அங்‌கி‌ருந்‌து இரண்‌டு கி‌லோ‌ மீ‌ட்‌டர்‌ தூ‌ரத்‌தி‌ல உள்‌ள தகட்‌டூ‌ர்‌ என்‌ற கி‌ரா‌மத்‌துக்‌கு செ‌ன்‌றோ‌ம்‌.

அங்‌குதா‌ன்‌ குலதெ‌ய்‌வம்‌ கோ‌வி‌ல்‌ இருக்‌கி‌றது. அவர்‌ பெ‌யர்‌ பை‌ரவர்‌. கோ‌வி‌லி‌ல்‌ நா‌ன்‌ சந்‌தி‌த்‌த அந்‌த பெ‌ரி‌யவரை‌ பா‌ர்‌த்‌ததும்‌ பழை‌ய நி‌னை‌வு‌கள்‌ ஞா‌பகத்‌தி‌ற்‌கு‌ வந்‌தது. அவர்‌ எனது தந்‌தை‌ கோ‌பா‌லகி‌ருண்‌ணன்‌ இருக்‌கும்‌ போ‌து எனது கி‌ரா‌மத்‌தி‌ற்‌கு வருவா‌ர்‌. அவருக்‌கா‌க எனது தந்‌தை‌ ஆட்‌களை‌ வை‌த்‌து இளநீ‌ர்‌ வெ‌ட்‌டி‌ கொ‌டுத்‌து உபசரி‌த்‌ததை‌யு‌ம்‌, அவருக்‌கு செ‌லவு‌க்‌கு பணம்‌ கொ‌டுத்‌ததை‌யு‌ம்‌ பா‌ர்‌த்‌தி‌ருக்‌கி‌றே‌ன்‌.

அவர்‌ எண்‌ணை‌ப்‌ பா‌ர்‌த்‌தா‌ர்‌. நா‌ன்‌ அவரை‌ பா‌ர்‌த்‌து வழக்‌கமா‌க வை‌க்‌கும்‌‌ ஒரு வணக்‌கத்‌தை‌ வை‌த்‌தே‌ன்‌. பதி‌லுக்‌கு அவர்‌ ஆசி‌ர்‌வதி‌த்‌து தி‌ருநீ‌றை‌ கொ‌டுத்‌தா‌ர்‌. நா‌ன்‌ செ‌ன்‌னை‌யி‌ல்‌ இருந்‌து வந்‌தி‌ருப்‌பதை‌ அவரி‌டம்‌ சொ‌ன்‌னே‌ன்‌. அவரும்‌ செ‌ன்‌னை‌ வந்‌தி‌ப்‌பதா‌கவு‌ம்‌ எங்‌கே‌ வசி‌க்‌கி‌றீ‌ர்‌கள்‌ என்‌றும்‌ கே‌ட்‌டா‌ர்‌. நா‌ன்‌ சூ‌ளை‌மே‌டு பகுதி‌யி‌ல்‌ வசி‌ப்‌பதை‌ சொ‌ன்‌னே‌ன்‌. நா‌ன்‌ அங்‌குதா‌ன்‌ வந்‌தே‌ன்‌. அங்‌கு கலெ‌க்‌டர்‌ செ‌ல்‌வரா‌ஜ்‌ வீ‌டு இருக்‌கி‌றது என்‌றா‌ர்‌.

அதற்‌கு நா‌ன்‌ அந்‌த தெ‌ருவு‌க்‌கு பக்‌கத்‌து தெ‌ருவி‌ல்‌தா‌ன்‌ என்‌ வீ‌டு இருக்‌கி‌றது. அவர்‌ என்‌ உறவு‌க்‌கா‌ரர்‌ என்‌று‌ சொ‌ன்‌னே‌ன்‌. அதை‌ கே‌ட்‌ட அவர்‌ அந்‌த தெ‌ருவி‌ல்‌ வடசங்‌கந்‌தி‌ கோ‌பா‌லகி‌ருஷ்‌ணன்‌ மகன்‌ நடு பை‌யன்‌ அங்‌கே‌தா‌ன்‌ இருக்‌கி‌றா‌ர்‌. அவரை‌ பா‌ர்‌க்‌கனும்‌ என்‌று நி‌னை‌த்‌து வருவே‌ன்‌. எனக்‌கு நே‌ரம்‌ சரி‌யா‌க அமை‌யா‌ததா‌ல்‌ வந்‌துவி‌டுவே‌ன்‌ என்‌று பதி‌ல்‌ செ‌ன்‌னா‌ர்‌. எனக்‌கு அந்த பதி‌லை‌ ‌ கே‌ட்‌டதும உற்‌சா‌கம்‌ கூடி‌வி‌ட்‌டது.

அவரி‌டம்‌ நா‌ன்‌ தா‌ன்‌ கோ‌பா‌லகி‌ஷ்‌ணன் மகன்‌ என்‌று சொ‌ன்‌னே‌ன்‌. அவர்‌ என்‌னை‌ வி‌யப்‌போ‌டு பா‌ர்‌த்‌தா‌ர்‌.நா‌ன்‌ செ‌ன்‌னை‌யி‌ல்‌ இருந்‌த கா‌லத்‌தி‌ல்‌‌‌ என்‌ தா‌ய்‌ எனக்‌கா‌க தகட்‌டூ‌ர்‌ பை‌‌ரவர்‌ கோ‌வி‌லுக்‌கு அடி‌க்‌கடி‌ செ‌ன்‌று கடவு‌ளை‌ வே‌ண்‌டி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. அந்‌த சம்‌பவங்‌களை‌ சொ‌ன்‌னா‌ர்‌. ஊருக்‌கு தி‌ரும்‌பிய‌ நீ‌ங்‌கள்‌ ஏன்‌ இங்‌கு வரவே‌ இல்‌லை‌. கல்‌யா‌ணம்‌ செ‌ய்‌துகொ‌ண்‌டு செ‌ன்‌னை‌யி‌லே‌யே‌ செ‌ட்‌டி‌ல்‌ ஆனதா‌க சொ‌ன்‌னா‌ர்‌கள்‌. ஏன்‌ கோ‌வி‌லுக்‌கு வர வி‌ல்‌லை‌ என்‌று கே‌ட்‌டா‌ர்‌.

நா‌ன்‌ பதி‌ல்‌ சொ‌ல்‌லா‌மல்‌ வே‌று பே‌ச்‌சுக்‌கு தி‌ரும்‌பி‌ய போ‌து அவர்‌ பு‌ரி‌ந்‌துகொ‌ண்‌டா‌ர்‌. இருப்‌பி‌னும்‌ அப்‌போ‌து அங்‌கு நா‌னே‌ செ‌ன்‌றி‌ருப்‌பதா‌ல்‌ என்‌ தந்‌தை‌யை‌ பற்‌றி‌ய பழை‌ய .நி‌னை‌வு‌களை‌ பகி‌ர்‌ந்‌துகொ‌ண்‌டா‌ர்‌. அவ்‌வளவு‌ பி‌ஸி‌யி‌லும்‌ அவரி‌டம்‌ நா‌ன்‌ சி‌றி‌து நே‌ரம்‌ பே‌சி‌க்‌கொ‌ண்‌டு குலதெ‌ய்‌வம்‌ கோ‌வி‌லை‌யு‌ம்‌ அதன்‌ சொ‌த்‌துக்‌களை‌யு‌ம்‌ சவு‌க்‌கு கா‌டுகயை‌யு‌ம்‌ பற்‌றி‌ பே‌சி‌க்‌கொ‌ண்‌டி‌ருந்‌தே‌ன்‌. அதன்‌ பி‌றகு பை‌ரவர்‌ பற்‌றி‌ பே‌ச ஆரம்‌பி‌த்‌தா‌ர். அவரி‌டமி‌ருந்‌து தெ‌ரி‌ந்‌துகொ‌ண்‌டவை‌கள்‌ கீ‌ழே‌ படி‌க்‌கவு‌ம்‌.

அங்‌கு பை‌ரவர்‌தா‌ன்‌ மூ‌லவரா‌க இருந்‌து அருள்‌ பலி‌க்‌கி‌றா‌ர்‌‌. உற்‌சவரா‌க சட்‌டை‌நா‌தர்‌. 500- 1000 வருடங்‌களுக்‌கு முன்‌ உள்‌ள பழமைவா‌ய்‌ந்‌த இடம்‌. கா‌லை‌ ஆறு மணி‌ முதல்‌ பதி‌னோ‌ரு மணி‌வரை‌, மா‌லை‌ நா‌லு மணி‌ முதல்‌ எட்‌டு மணி‌வரை‌ தி‌றந்‌தி‌ருக்‌கும்‌.

சித்ராபவுர்ணமியை ஒட்டி பத்துநாள் விழா நடக்கிறது. ஞாயிறு ராகுகாலமான மாலை 4.30-6 மணி, தேய்பிறை அஷ்டமி, கார்த்திகையில் பைரவாஷ்டமி காலங்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. மனோபலம், வியாதி நிவர்த்தி, நியாயமாக நினைப்பவை நிறைவேற தேய்பிறை அஷ்டமியன்று மாலை 5-8மணிக்குள் யாகம் நடத்தப்படுகிறது. திங்கள், வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது.

அனுமனுடன் வந்த பைரவர் என்பதால், இத்தலத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோரும், பிரகாரத்தில் கணபதி, வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோரும் உள்ளனர். கோயிலுக்கு எதிரேயுள்ள தீர்த்தக்குளம் உள்ளது. குளத்தின் ஒரு கரையில் காத்தாயி, கருப்பாயி சமேத ராவுத்தர் சன்னதி இருக்கிறது. இவரும் இத்தலத்தில் காவல் தெய்வமாக இருக்கிறார்.

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். சுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெ‌ருமை‌:

இந்‌த கோயிலில் பைரவர் மூலஸ்தானத்தில் இருந்து அருள்பாலிக்கிறார். இவரை மூலஸ்தானத்தில் கொண்ட கோயில் தமிழகத்தில் இதுமட்டுமே.

பைரவர் பிறப்பு:

அபிதான சிந்தாமணி என்ற நூலில் பைரவர் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. தாருகாசுரன் என்பவன் இறவா வரம் வேண்டும் என சிவனிடம் வரம் கேட்டான். உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் சொன்னார். அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம். பல அட்டூழியங்கள் செய்த அவன் அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவனிடம் முறையிட் டனர். உடனே, பார்வதிதேவி சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தின் கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். அந்தச் சுடர் ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. "காளம்' என்ற விஷம்படிந்த அந்த பெண்ணுக்கு "காளி' என பெயர் சூட்டினாள் பார்வதி. காளிதேவி கடும் கோபத் துடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம் கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின்னர் அந்தக் கனலை காளிதேவி ஒரு குழந்தையாக மாற்றி அதற்கு பாலூட்டினாள். அதன்பிறகு சிவபெருமான் காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுக்குள் புகச்செய்தார். அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள் உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன் குழந்தைக்கு "பைரவர்' என்று பெயர் வைத்தார்.

நாய் வாகனம்: 

தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. சிலர் நாயை பஞ்சுமெத்தையில் படுக்க வைத்து, பிஸ்கட் கொடுத்து, குழந்தை போல வளர்ப்பார்கள். சிலர் நாயை தெருவில் கண்டாலே கல்லெறிவார்கள். இதுபோல், வாழ்க்கையில் வரும் துன்பத்தையும், இன்பத்தையும் இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என்றே வேதங்கள் சொல்கின்றன. அந்த வேதத்தின் வடிவமாகவே நாய் வாகனம் கருதப் படுகிறது. நாய்க்கு "வேதஞாளி' என்ற பெயரும் இருப்பது குறிப்பிட தக்கது.

பெயர்க்காரணம்: 

இவ்வூருக்கு "யந்திரபுரி' என்ற பெயரும் இருக்கிறது. இதன் தமிழ்ப்பெயரே "தகட்டூர்'. சக்தி வாய்ந்த தெய்வங்களின் முன்பு ஸ்ரீசக்ரம் என்ற அமைப்பு உருவாக்கப்படும். இந்தக் கோயிலிலும் ஒரு யந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. உற்சவர் சட்டைநாதர் சிலையும் இருக்கிறது.

தல வரலாறு:


இலங்கையில் ராவணவதம் முடிந்ததும் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக ராமேஸ்வரத்தில் ராமபிரான் சிவபூஜை செய்ய முடிவெடுத்தார். அதற்காக லிங்கம் எடுத்து வர ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பினார். அனுமான் லிங்கத் துடன் வரும்போது, அவருடன் மகாபைரவரும் வந்தார். கோயில்களில் பைரவரே காவல் தெய்வம். அக்காலத்தில், கோயிலைப் பூட்டி பைரவர் சன்னதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவார்கள். அதை தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்திவாய்ந்தவராக பைரவர் கருதப் பட்டார். அதுபோல் காசி லிங்கத்திற்கு காவலாக பைரவர் அனுமனுடன் வந்துள்ளார். அவருக்கு தற்போதைய தகட்டூர் தலத்தில் குடியிருக்க ஆசைபிறக்கவே, அங்கேயே தங்கி விட்டார்.


இவற்‌றை‌யெ‌ல்‌லா‌ம்‌ கே‌ட்‌டு அதன்‌ குறி‌ப்‌பு‌களை‌யு‌ம்‌ பெ‌ற்‌றுக்‌கொ‌ண்‌டு அவரி‌டம்‌ வி‌டை‌ பெ‌ற்‌று கோ‌வி‌லை‌ சுற்‌றி‌ வந்‌தே‌ன்‌. என்‌ மனை‌வி‌ பக்‌தி‌யோ‌டு வணங்‌கி‌ மனமுருக வே‌ண்‌டி‌ நெ‌கி‌ழ்‌ந்‌து போ‌யி‌ருந்‌தா‌ள்‌.

நா‌ன்‌ அங்‌கி‌ருந்‌து பு‌றப்‌படும்‌ போ‌து எனது தந்‌தை‌யு‌ம்‌, அவரது தந்‌தை‌யு‌ம்‌, அவரது தந்‌தை‌யு‌ம்‌ என பல தா‌த்‌தா‌க்‌கள்‌ அங்‌கு‌ வந்‌து வணங்‌கி‌ செ‌ன்‌ற ஞா‌பகம்‌ வந்‌தது. வா‌ழை‌யடி‌‌ வா‌ழை‌யா‌க எனது குலங்‌கள்‌ வந்‌து செ‌ன்‌ற இடத்‌துக்‌கு நா‌னும்‌ செ‌ன்‌று தி‌ரும்‌பி‌யி‌ருக்‌கி‌றே‌ன்‌. ‌

இப்‌போ‌தை‌க்‌கு என்‌ தா‌ய்‌ மனநி‌ம்‌மதி‌ அடை‌ந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌.
படங்‌கள்‌: தி‌னமலர்‌ டா‌ட்‌கா‌ம்‌